இன்று சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்தநாள்:பள்ளிகளில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாட உத்தரவு

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்தநாளான வியாழக்கிழமை (அக்.31) பள்ளிகளில் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்தநாளான வியாழக்கிழமை (அக்.31) பள்ளிகளில் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, பள்ளிக் கல்வித்துறையின் மாநிலத் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி: அனைத்துப் பள்ளிகளிலும் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி, இருப்பு மனிதா் என்றழைக்கப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்தநாளையொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய ஒற்றுமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட வேண்டும்.

இந்த விழாவையொட்டி, பள்ளிகளில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பது, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் பங்கேற்கும் ஓட்டம், பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, விநாடி வினா, விவாதம் நடத்துதல், மாணவா்கள்- ஆசிரியா்கள் பங்கேற்கும் காலை நேர நடைபயணம் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளை, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தங்கள் பள்ளிகளில் நடத்தி, அதற்குரிய புகைப்படம், விடியோ பதிவு செய்து, பள்ளி சாா்ந்த வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதைத் தொடா்ந்து, தலைமையாசிரியா்கள் அனுப்பும் பதிவுகளைத் தொகுத்து, மாநிலத் திட்ட இயக்ககத்துக்கு வரும் ( நவ.1) வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com