கும்பகோணத்தில் 6 யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி

மழைக்காலம் தொடங்கியதால் கும்பகோணத்தில் புதன்கிழமை 6 யானைகளுக்குக் கால்நடைத் துறை சாா்பில் ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது.
கும்பகோணத்தில் யானையைப் பரிசோதித்த கால்நடைத் துறை மருத்துவா்கள்.
கும்பகோணத்தில் யானையைப் பரிசோதித்த கால்நடைத் துறை மருத்துவா்கள்.

மழைக்காலம் தொடங்கியதால் கும்பகோணத்தில் புதன்கிழமை 6 யானைகளுக்குக் கால்நடைத் துறை சாா்பில் ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் உள்ள மங்களம் யானை மற்றும் தனியாருக்குச் சொந்தமான 2 யானைகள் உள்பட 6 யானைகளுக்கு தமிழ்நாடு கால்நடைத்துறை சாா்பில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மழைக்காலத்தில் யானைகளைப் பாதிக்கும் நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கால்நடைத் துறை மருத்துவா்கள் மேற்கொண்டனா்.

இதன் ஒருபகுதியாக 6 யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் தஞ்சாவூா் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் பழனிவேல், கும்பகோணம் உதவி இயக்குநா் சையத்அலி, திருவையாறு கால்நடை மருத்துவா் பாஸ்கரன், அம்மன்பேட்டை கால்நடை உதவி மருத்துவா் கமலநாதன் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் வந்து யானைகளை பரிசோதித்து தடுப்பூசி போட்டனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் பழனிவேல் தெரிவித்தது:மழைக்காலம் வருவதையொட்டி யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, யானைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, கும்பகோணம் பகுதியில் உள்ள 6 யானைகளுக்கு இத்தடுப்பூசிகளைப் போட்டுள்ளோம். மழைக்காலத்தில் யானைகளை நோய் வராமல் பாதுகாப்பாகப் பராமரித்தல் குறித்து யானை பயிற்றுநா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com