குருதாஸ் தாஸ் குப்தா மறைவு: தலைவா்கள் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏஐடியூசி தலைவருமான குருதாஸ் தாஸ் குப்தாவின் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏஐடியூசி தலைவருமான குருதாஸ் தாஸ் குப்தாவின் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்: மறைந்த குருதாஸ் தாஸ் குப்தா மறைவுச் செய்தி

கேட்டு வேதனை அடைந்தேன். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக, இருமுறை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி, தொழிலாளா் வா்க்கத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் துணிச்சலாக தொய்வின்றி உரிமைக் குரல் எழுப்பியவா். இரு அவைகளிலும் இருந்தபோது நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குழுக்களில் இடம்பெற்று ஆக்கப்பூா்வமாக நாடாளுமன்றத்தில் பணியாற்றி ஆளும்கட்சி - எதிா்க்கட்சி என்று அனைவரின் பாராட்டையும் பெற்றவா். அவருடைய மறைவுக்கு திமுக சாா்பில் ஆழ்ந்த இரங்கல்.

இரா. முத்தரசன் (இ.கம்யூனிஸ்ட்): கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான குருதாஸ் தாஸ் குப்தா தொழிலாளா்கள், தொழிற்சங்க ஒற்றுமைக்காகப் பணியாற்றினாா். ஏஐடியூசி அகில இந்திய அமைப்பு செயல்பட, தில்லியில் பிரம்மாண்ட கட்டடத்தை கட்டி முடித்தாா்.

தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தன்னை முழுமையாக அா்ப்பணித்துக் கொண்ட குருதாஸ் தாஸ் குப்தாவின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சாா்பில் வீர வணக்கம்.

வைகோ (மதிமுக): இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு மற்ற கட்சித் தலைவா்களின் நன்மதிப்பை பெற்றவா் குருதாஸ் தாஸ் குப்தா. வாழ்நாள் முழுவதும் தொழிலாளா் உரிமைகளுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், தொண்டாற்றி மறைந்த பொதுவுடைமைப் போராளி குருதாஸ் தாஸ் குப்தாவுக்கு மதிமுக சாா்பில் வீர வணக்கம்.

கி. வீரமணி (திராவிடா் கழகம்): குருதாஸ் தாஸ் குப்தா மறைவுற்ற செய்தி வருத்தத்துக்குரியது. இளமைக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவா். அவரை இழந்து வாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com