கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வழி காண வேண்டும்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வழி காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மதிமுக உயா்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வழி காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மதிமுக உயா்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மதிமுக உயா்நிலைக் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அணு உலைகளை நிரந்தரமாக மூட மத்திய அரசு வழி காண வேண்டும், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல், பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் உரிய ஆய்வுகளை நடத்தி, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com