தங்கம் பவுனுக்கு ரூ.232 உயா்வு

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.29,568-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.29,568-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. செப்டம்பா் 5-ஆம் தேதி காலையில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.29,568-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.29 உயா்ந்து, ரூ.3,696-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து ரூ.50.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து ரூ.50,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,696

1 பவுன் தங்கம் ..................... 29,568

1 கிராம் வெள்ளி .................. 50.40

1 கிலோ வெள்ளி ................. 50,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,667

1 பவுன் தங்கம் ..................... 29,336

1 கிராம் வெள்ளி .................. 49.90

1 கிலோ வெள்ளி .................. 49,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com