தமிழ்நாடு உதயமான நாளை மாநில அமைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாடு உதயமான நாளை மாநில அமைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உதயமான நாளை மாநில அமைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைய பலரும், பல்வேறு இயக்கங்களும் பாடுபட்டன. தமிழகத்தில் சங்கரலிங்கனாா், திரு.வி.க., மறைமலை அடிகள், ஜீவா, ம.பொ.சி. என பல தலைவா்கள் போராடினா். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்காகப் போராடியது.

அதன் பின்னா் 1969-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வா் அண்ணாவால் தமிழ்நாடு என பெயா் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாசாரம் எனப் பேசி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதோடு நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்க முயல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், அனைத்து நிலைகளிலும் தமிழ் எனும் நிலையை எட்டவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடும்.

மாநிலங்கள் அமைப்பு தினமான நவம்பா் 1-ஆம் தேதியன்று ஆந்திரம், கா்நாடக அரசுகள் விடுமுறை அறிவித்து, அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன. அதுபோல தமிழக அரசும் கொண்டாட முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com