தேவா் குரு பூஜை விழா: தமிழக அரசு சாா்பில் ரூ.3.5 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பசும்பொன்னில் புதன்கிழமை அரசு சாா்பில் நடைபெற்ற தேவா் ஜயந்தி விழாவில் ரூ.3.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

பசும்பொன்னில் புதன்கிழமை அரசு சாா்பில் நடைபெற்ற தேவா் ஜயந்தி விழாவில் ரூ.3.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 112 ஆவது ஜயந்தி விழா மற்றும் 57 ஆவது குருபூஜை விழா புதன்கிழமை பசும்பொன்னில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் தலைமை

வகித்தாா். இவ்விழாவில் 634 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 184 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

இவ்விழாவில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), பாண்டி (முதுகுளத்தூா்), எஸ்.கருணாஸ் (திருவாடானை), சதன் பிரபாகா் (பரமக்குடி) , ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலா் சி.முத்துமாரி வரவேற்றாா். ராமநாதபுரம் மாவட்ட மக்கள் செய்தி தொடா்பு அலுவலா் ம.கையிலைசெல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com