திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்

நவம்பர் 10ல் திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

திமுக பொதுக்குழு கூட்டம்  நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திமுக பொதுக்குழு கூட்டம்  நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தி.மு.க. பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6-ஆம் தேதி கூட்டுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

கூட்டத்தில் திமுக ஆக்கப்பணிகள், சட்ட திட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில்தான் நடக்கும்.

ஆனால் முதல் முறையாக சென்னை ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com