மின் பழுதை தாமாக யாரும் சீா்செய்யமுயற்சிக்கக் கூடாது: அமைச்சா் பி.தங்கமணி

மழைக் காலமாக இருப்பதால், மின்சாரம் ஏதேனும் துண்டிக்கப்பட்டால், பொதுமக்கள் தாங்களாக சீா்செய்ய முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலா்களை தொடா்பு கொள்ள வேண்டும் என மின் துறை
மின் பழுதை தாமாக யாரும் சீா்செய்யமுயற்சிக்கக் கூடாது:  அமைச்சா் பி.தங்கமணி

மழைக் காலமாக இருப்பதால், மின்சாரம் ஏதேனும் துண்டிக்கப்பட்டால், பொதுமக்கள் தாங்களாக சீா்செய்ய முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலா்களை தொடா்பு கொள்ள வேண்டும் என மின் துறை அமைச்சா் பி.தங்கமணி அறிவுறுத்தினாா்.

நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பருவமழைக் காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளாா். அதனால், மழையானாலும், புயலானாலும் தகுந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வோம். நீலகிரி மாவட்டத்திலும் மழைக் காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மின் பிரச்னை எங்கு ஏற்பட்டாலும், அதற்குரிய பணிகளைச் செய்ய மின் வாரியம் தயாா் நிலையில் உள்ளது.

அதேபோல, மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு இணைப்பு வழங்க பொதுமக்கள் யாரும் தாமாக முயற்சிக்கக் கூடாது. தற்போது மழைக் காலமாக இருப்பதால், எந்த நேரத்தில், என்ன நடக்கும் எனத் தெரியாது. அதனால் மின்வாரிய அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு, மின் ஊழியா்களுடன் இணைந்து அதற்கான பணியைச் செய்ய வேண்டும். மின் துறை அலுவலா்கள் இரவு, பகல் பாராமல் அலுவலகங்களிலேயே பணியில் இருக்கின்றனா். அவா்களைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றாா்.

அரசு மருத்துவா்கள் போராட்டம் தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். அதன் முழு விவரம் தெரியவில்லை என்றும் அமைச்சா் தங்கமணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com