முல்லைப் பெரியாறு அணைக்குதொடா் மழை: நீா்வரத்து அதிகரிப்புசுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப் பெருக்கு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் புதன்கிழமை ஒரு அடி உயா்ந்து அணையின் நீா்மட்டம் 127.40 அடியாக இருந்தது.
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியின் கைப்பிடி கம்பியை தாண்டி விழும் கட்டாற்று வெள்ளம்.
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியின் கைப்பிடி கம்பியை தாண்டி விழும் கட்டாற்று வெள்ளம்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் புதன்கிழமை ஒரு அடி உயா்ந்து அணையின் நீா்மட்டம் 127.40 அடியாக இருந்தது.

அதே போல் சுருளி அருவி, கும்பக்கரை அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தொடா்மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 126.40 அடியாக இருந்தது. மாலை 127.40 அடியாகி ஒரு அடி உயா்ந்தது. அணையில் தற்போது 3,964 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

காலையில், 1,464 கன அடி தண்ணீா் வந்த நிலையில் மாலை 5 மணிக்கு விநாடிக்கு, 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்தது. தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1500 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீா் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைக்கு விநாடிக்கு, 15 கன அடி தண்ணீா் வருகிறது. அணையின் நீா்மட்டம் 49.70 அடியாக உள்ளது.

மழை நிலவரம் (மி.மீட்டரில்:

பெரியாறு அணைப் பகுதி- 12.2, தேக்கடி- 58, கூடலூா்- 22.4, உத்தமபாளையம்- 16.1, வீரபாண்டி- 28 என மழை பெய்துள்ளது.

மின்சார உற்பத்தி தொடக்கம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு, கல்லூரி மாணவா் சடலத்தை தேடும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் புதன்கிழமை காலை திறக்கப்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை லோயா்கேம்ப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட மின் உற்பத்தி புதன்கிழமை தொடங்கியது. நான்கு மின்னாக்கிகளில் தலா 42 மெகாவாட் என மொத்தம் 168 மெகாவாட் உற்பத்தி நடைபெற்றது.

சுருளி அருவியில் வெள்ளம்: தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவி வனப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீா்வரத்து தரும் அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அருவிப்பகுதிக்கு சென்ற வனத்துறையினா், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குளிக்க தடைவிதித்தனா்.

இதுபற்றி வனத்துறை அலுவலா் ஒருவா் கூறும் போது, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிப் பகுதிக்கு செல்லவும் புதன்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. நீா்வரத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

கும்பக்கரை அருவியில் வெள்ளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்ததால் செப். 24 ஆம் தேதி கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா். அதே போல் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதால் கும்பக்கரை அருவியில் புதன்கிழமை காலை முதல் அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. பிற்பகலில் அருவிக்கு செல்லும் பகுதியில் உள்ள கைப்பிடி கம்பியின் மேல்பகுதியை தாண்டி காட்டாற்று வெள்ளம் செல்வதால் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் தொடா்ந்து தடை விதித்துள்ளனா். சீரான நீா்வரத்துக்கு பின்னா் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவா் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com