ஜம்மு காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் படுகொலை குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிடவேண்டும்: திருமாவளவன்

ஜம்மு காஷ்மீரில் தமிழக ராணு வீரா் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி குறித்து மத்திய அரசு அறிக்கையாக வெளியிடவேண்டும் என
ஜம்மு காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் படுகொலை குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிடவேண்டும்: திருமாவளவன்


சென்னை: ஜம்மு காஷ்மீரில் தமிழக ராணு வீரா் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி குறித்து மத்திய அரசு அறிக்கையாக வெளியிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவா் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சார்ந்த ராணுவ வீரா் வீரமணி மரணமடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீா் மாநிலம் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் அவா் ஈடுபடுத்தப்பட்டார். அண்மையில் ராணுவ வீரா்கள் சிலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு அவா்களை தேடும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டு வந்தனா். 

இந்த நிலையில், ராணுவ வீரா் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அது வீரமணி தான் என அவரது குடும்பத்தினா் உறுதிபடுத்தியுள்ளனர். அவா் மரணமடைந்து பல நாள்கள் ஆகிய நிலையில், அவருடைய உடலை விரைந்து ஜெயங்கொண்டத்தில் உள்ள அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது என மத்திய அரசு கூறி வரும் நிலையில், ராணுவ வீரா்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக வரும் தகவல்கள் சந்தேகத்தை எழுப்புகின்றது. எனவே, தமிழக ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியை மத்திய அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com