விவேகானந்தர் நினைவு மண்டப பொன் விழா: நாளை குடியரசுத் தலைவர் தொடக்கி வைக்கிறார்

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை செப். 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லியில் தொடக்கி வைக்கிறார்.
விவேகானந்தர் நினைவு மண்டப பொன் விழா: நாளை குடியரசுத் தலைவர் தொடக்கி வைக்கிறார்

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை செப். 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லியில் தொடக்கி வைக்கிறார்.
 கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு செப். 2-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை செப். 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லியில் தொடக்கி வைக்கிறார்.
 இதுகுறித்து சனிக்கிழமை கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தின் பொருளாளர் ஹனுமந்த ராவ், மூத்த ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
 பொன் விழா கொண்டாட்டத்தை வரும் செப். 2 முதல் 2020 செப். 2 ஆம் தேதி வரை ஒரு வருடத்துக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா நாடு முழுவதும் மக்கள் தொடர்பு நிகழ்வாக "ஒரே பாரதம்-வெற்றி பாரதம்' என்ற பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக விவேகானந்த கேந்திரத்தின் தேசிய நிர்வாகிகள் தில்லியில் திங்கள்கிழமை (செப். 2) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர். தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்களையும் சந்திக்க உள்ளனர். விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்ட நிகழ்வை திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் தொடக்கி வைக்கிறார்.
 இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொன்விழா நிகழ்ச்சிகள் ஓராண்டுக்கு நடைபெறும். அப்போது, விவேகானந்தர் நினைவு மண்டப வரலாறு, உருவான விதம் உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ள கையேடுகள் முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் வழங்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com