கீழடியில் சுமார் 2,500 ஆண்டுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 2, 500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் சுமார் 2,500 ஆண்டுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 2, 500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டது.
 கீழடியில் கடந்த 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2 மற்றும் 3-ஆம் கட்டமாக அகழாய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது.
 இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
 இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவை கண்டறியப்பட்டன.
 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுடாத மண் குவளை கண்டெடுக்கப்பட்டது. மண்பாண்டப் பொருள்களை சுட்டால் மட்டுமே, புவியில் மட்காமல் நீண்ட நாள்கள் இருக்கும்.
 சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பட்ட சுடாத மண் குவளை இன்று வரை மட்காமல் உள்ளது. மேலும் அது பளபளப்பாகவும் இருக்கிறது. இந்த குவளை 2,500 ஆண்டுகளாக மக்கிப் போகாமல் இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com