Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.29,616- Dinamani

சுடச்சுட

    
    gold-13


    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.29,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
    சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. 
    இந்தநிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.29,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயர்ந்து, ரூ.3,702-க்கு விற்பனையானது.வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயர்ந்து ரூ.52 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.52,000 ஆகவும் இருந்தது.
    திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம்    3,702
    1 பவுன்  தங்கம்    29,616
    1 கிராம் வெள்ளி    52.00
    1 கிலோ வெள்ளி    52,000
    சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம்    3,691
    1 பவுன் தங்கம்    29,528
    1 கிராம் வெள்ளி    51.60
    1 கிலோ வெள்ளி    51,600

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai