சோளிங்கர் ஏரியின் நடுவே கிணறு: ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஏரியின் நடுவே கிணறு தோண்டுவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சோளிங்கர் ஏரியின் நடுவே கிணறு: ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு


வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஏரியின் நடுவே கிணறு தோண்டுவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சேகர் தாக்கல் செய்த மனுவில், சோளிங்கர் தேர்வு நிலைப் பேரூராட்சியில்  சோளிங்கர் ஏரி உள்ளது. 
இந்த ஏரியின் நடுவில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கிணறுகள் தோண்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 
இந்த ஏரியின் நடுவில் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால், ஏரி வறண்டு போகும். 
மேலும் இந்த ஏரியின் தண்ணீரை நம்பியுள்ள 900 ஏக்கர் பரப்பிலான பாசன நிலங்கள் பாதிக்கப்படும். எனவே இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சோளிங்கரில் குடிநீர் வசதிக்காக பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுவாக ஒரு நீர் நிலையில் கிணறு தோண்டும் போது பொதுப்பணித் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் எனக்கூறி, ஏரியில் கிணறு தோண்டுவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com