முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்த மர்மமும் இல்லை:  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்த மர்மமும் இல்லை:  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: 
தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்து கட்சிக்கு விசுவாசமுள்ள தொண்டராகப் பணியாற்றிய சகோதரி தமிழிசைக்கு, தெலங்கானா ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உழைப்புக்கேற்ற வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் விமர்சனம்: முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசி வருகிறார். அவரைப் பொருத்தவரை எதிர்மறையான கேள்வியைக் கேட்பார். அவரே எதிர்மறையான பதிலையும் தருவார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும். அதிமுக என்பது யாராலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இரண்டு தொகுதிகளிலும் மாபெரும், மகத்தான வெற்றியைப் பெறுவோம்.

பொதுத் துறை வங்கிகள் இணைப்பு: பொதுத்துறை வங்கிகள் இணைப்பு விஷயத்தில் எந்தவொரு வங்கியும் மூடப்படாது என்று மத்திய அரசு உறுதியாகக் கூறியுள்ளது. இரண்டு அல்லது மூன்று வங்கிகளை இணைப்பதாகவே தெரிவித்துள்ளது. எந்தவொரு வங்கியையும் மூடப் போவதாகச் சொல்லவில்லை என்பதால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரது சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிறகு அதற்குரிய விடை கிடைக்கும். முதல்வர் பதவியை வேறு யாரிடமாவது ஒப்படைப்பது என்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அதில் யாரும் தலையிட முடியாது.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் உறுதியாகக் கலந்து கொள்வோம் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com