சந்திரயான்-2: லேண்டர் சுற்றுப்பாதை முதல் முறையாகக் குறைப்பு

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட லேண்டர் விக்ரம்  நிலவை சுற்றி வரும் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் (இஸ்ரோ) வெற்றிகரமாக
சந்திரயான்-2: லேண்டர் சுற்றுப்பாதை முதல் முறையாகக் குறைப்பு


சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட லேண்டர் விக்ரம்  நிலவை சுற்றி வரும் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் (இஸ்ரோ) வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டு, நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 104 கி.மீ. தொலைவிலான சுற்றுப் பாதைக்கு லேண்டர் வந்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி நீள்வட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவின் நீள்வட்டப் பாதைக்குச் சென்று சுற்றி வருகிறது.
இந்த நிலையில், விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். அதன் மூலம், விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி பிரிக்கப்பட்ட இடத்தில் இருந்தபடியே, நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
நிலவின் பரப்பில் தரையிறங்கக்கூடிய லேண்டர் பகுதியானது, நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலான சுற்றுப் பாதையில் சுற்றி வந்தது.
முதல் சுற்றுப்பாதை குறைப்பு: இந்த நிலையில், லேண்டரின் நிலவு சுற்றுப்பாதையை குறைக்கும் முயற்சியை விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் மேற்கொண்டனர். அதன் மூலம், நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 104 கி.மீ. தொலைவிலான சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.
அடுத்ததாக, புதன்கிழமை லேண்டரின் சுற்றுப்பாதையை மேலும் குறைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள், செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், அதை தரை யிறக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com