பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பிளஸ் 2  பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.


பிளஸ் 2  பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  அந்த வகையில் நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்புக்கும் புதிய பாடத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மாதிரி வினாத்தாள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் பொதுத் தேர்வுக்கு உரிய மாதிரி வினாத் தாள்களை கல்வித்துறை  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 
அதன்படி தமிழ், கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், இயற்பியல், மனை அறிவியல், வரலாறு உள்பட 37 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதை பின்பற்றி மாணவர்களைத் தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், இந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com