வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் திமுகவினர் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் திமுகவினர் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியத் தேர்தல் ஆணையம்  வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை போர்ட்டல் மற்றும் கைப்பேசி செயலி மூலம் வாக்காளர்கள் தாங்களே பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திட்டப் பணிகள் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் காலகட்டத்தில் வழங்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வாக்காளர் சரிபார்த்தல் திட்டப் பணியில், வாக்காளர் உதவி தொலைபேசி எண் 1950, கைப்பேசி செயலி, வாக்காளர் சேவை போர்ட்டல், பொது சேவை மையங்கள், வாக்காளர் உதவி மையங்கள் இவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்கள் விவரங்களைத் திருத்தம் மேற்கொள்ளவோ, சரிபார்த்துக் கொள்ளவோ செய்யலாம். எனவே, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள காலகட்டத்துக்குள் திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் முழுமையாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தப் பணி குறித்து தலைமைக் கழகத்துக்கும் கடிதம் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com