சுடச்சுட

  

  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நிலுவை சான்றிதழ் வழங்கும்   சிறப்பு முகாம் நாளை தொடக்கம்

  By DIN  |   Published on : 05th September 2019 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் நிலுவை சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.  
  இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்கள் பட்டம் மற்றும் பட்டயச் சான்றிதழ்களை இன்னும் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களுக்காக நிலுவை சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பர் 6, 7-ஆம் தேதி ஆகிய  இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்டுத்திக் கொண்டு இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.750 செலுத்தி தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், சான்றிதழ் பெற வருபவர்கள் ஆதார் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை அவசியம் எடுத்து வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai