5 வழக்குரைஞர்களுக்கு தடை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

கொலை வழக்கு, குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோதமாக சமரச தீர்வு மையங்கள் நடத்திய குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 வழக்குரைஞர்கள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தியாவில்


கொலை வழக்கு, குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோதமாக சமரச தீர்வு மையங்கள் நடத்திய குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 வழக்குரைஞர்கள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராக தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொலை வழக்கு, குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் போலியாக சமரச தீர்வு மையங்கள் நடத்தியது என குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்குரைஞர்கள் கே.ராஜாராம், பி.வி.ரவி, பி.கே.முத்துசாமி, வி.ப்ரீத்தா, பி.அருள் ஆகிய 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் 5 பேரும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தியா முழுவதும் உள்ள எந்த நீதிமன்றங்களிலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com