சுடச்சுட

  

  வாகன ஓட்டிகளிடம் யார் அபராதம் வசூலிக்கலாம்? தமிழக அரசு விளக்கம்

  By DIN  |   Published on : 05th September 2019 03:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  helmet


  சென்னை: எஸ்எஸ்ஐக்கு நிகரான காவல் அதிகாரியே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

  போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் அபராதத் தொகையை 10 மடங்கு உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வரப்பட்டது.

  இதையடுத்து, சாலை விதிகளை மீறுவோர் உள்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடமும், ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடமும் அபராதம் வசூலிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக போக்குவரத்து அதிகாரிகளால் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளிடம் யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

  அதில், சிறப்பு நிலை துணை ஆய்வாளர் எனப்படும் எஸ்எஸ்ஐ (கிரேட் 2) நிகரான போக்குவரத்து காவல் அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எஸ்எஸ்ஐக்குக் குறைவான அதிகாரத்தில் இருக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிக்கக் கூடாது.

  மேலும் படிக்க: கார் ஓட்டுபவரும் இனி ஹெல்மெட் போடணுமோ? கலங்கும் மக்கள்!

  சோதனைச் சாவடிகளைத் தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் அபராதம் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai