குற்றாலத்தில் சாரல் மழை

குற்றாலம் பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க


குற்றாலம் பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 5 மணி நேரத்துக்கு பின்னர் தடை நீக்கப்பட்டதால் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. எனினும் அவ்வப்போது மிதமான வெப்பமும் இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பேரருவியில் பிற்பகலில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து குறையத் தொடங்கியதும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, திடீரென பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல், ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதித்தனர்.
இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். 
மாலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து தடை நீக்கப்பட்டது.  கூட்டம் அதிகமில்லாததால் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com