கேரளம், நீலகிரியில் தொடர் மழை: பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கேரள மாநிலத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருவதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்.


கேரள மாநிலத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருவதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் தண்ணிரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் 100 அடி கொண்ட பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை வியாழக்கிழமை அதிகாலை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. 
தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை 3.30 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது 10 அயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் நீலகிரி மற்றும் கேரள மாநிலப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் ஒரு மாதத்துக்குப் பின் மீண்டும் அதிகரித்துள்ளது. பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் பவானிஆற்றங்கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com