சுடச்சுட

  
  kutralam

  குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

  குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலைமுதல் பெய்த தொடர் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
  குற்றாலம் பகுதியில் குறிப்பாக மலைப்பகுதியில் பெய்த தொடர் சாரல்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
  அனைத்து அருவிகளிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
  மாலையில் அருவிகளில் தண்ணீர்வரத்து குறையத் தொடங்கியதையடுத்து, முதலில் பழைய குற்றாலம் அருவியிலும், தொடர்ந்து ஐந்தருவி மற்றும் பேரருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai