தங்கம் விலை பவுன் ரூ.29,264

கடந்த 6 நாள்களாக  உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.664 குறைந்து, ரூ.29,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.


கடந்த 6 நாள்களாக  உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.664 குறைந்து, ரூ.29,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம்  விலை உயர்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி  விலை ரூ.28 ஆயிரத்தையும், ஆகஸ்ட்  13-ஆம் தேதி ரூ.29 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், செப்டம்பர் 3-ஆம் தேதி பவுன் தங்கம்  ரூ.29,928-க்கு உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 6 நாள்களாக தங்கம் விலை உயர்ந்து  வந்தநிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.664 குறைந்து, ரூ.29,264-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
இதேபோல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.50 குறைந்து, ரூ.51.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து, ரூ.51,300 ஆகவும் இருந்தது. 
தங்கம் விலை கணிசமாக குறைந்தது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை வலுவாக இருந்தது. 
மேலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையில் எதிரொலித்தது. இதன் காரணமாக, தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதுபோல, தங்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. தங்கம் விலை சரிவு தற்காலிகமானது. ஓரிரு நாளில் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்    3,658
1 பவுன்  தங்கம்    29,264
1 கிராம் வெள்ளி    51.30
1 கிலோ வெள்ளி    51,300
வியாழக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்    3,741
1 பவுன் தங்கம்    29,928
1 கிராம் வெள்ளி    54.80
1 கிலோ வெள்ளி    54,800
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com