25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா: சென்னை காவல்துறையின் அடுத்த இலக்கு

சென்னைக்குள்  25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்துவது என பெருநகர காவல்துறை அடுத்த இலக்கு நிர்ணயித்து, செயல்படத் தொடங்கியுள்ளது.
25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா: சென்னை காவல்துறையின் அடுத்த இலக்கு

சென்னைக்குள்  25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்துவது என பெருநகர காவல்துறை அடுத்த இலக்கு நிர்ணயித்து, செயல்படத் தொடங்கியுள்ளது.
சுமார் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்யும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் கண்காணிப்பு கேமரா குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியது.
கண்காணிப்பு கேமராக்களை வீடுகளிலும்,கடைகளிலும், பொது இடங்களிலும் பொருத்தும்படி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பது, முக்கியமான சாலை சந்திப்புகளில் விளம்பரப் பதாகைகள் வைப்பது, விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற பிரசாரங்களில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டது. அதேபோல திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டது.
 இந்தத் திரைப்படங்கள் கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களிலும் வேகமாக பரப்பட்டது. இதற்கு நல்ல பலனும் காவல்துறைக்கு கிடைத்தது. இப் பிரசாரத்துக்கு முன்னர் வரை சில ஆயிரங்கள் மட்டுமே கண்காணிப்பு கேமரா இருந்த நிலை மாறி, இதன் பின்னர் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் உட்பட்ட பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதில் வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த தியாகராயநகர், யானைக்கவுனி, பூக்கடை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளிலும் ராஜீவ்காந்தி சாலை,வேளச்சேரி,தாம்பரம் ஆகிய பகுதிகளில் இப்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. சென்னையில் இப்போது சுமார் 2.60 லட்சம் கேமராக்கள் கண்காணித்து வருவதாக பெருநகர காவல்துறை தெரிவிக்கிறது.
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல்துறை இப்போது பயன் அடையத் தொடங்கியுள்ளது. ஏனெனில் கடந்தாண்டை விட, இந்தாண்டு இது வரை தங்கச் சங்கிலி பறிப்பு 48 சதவீதம், கொள்ளை 24 சதவீதம், அடிதடி 11 சதவீதம், குறைந்துள்ளன. இதேபோல செல்லிடப்பேசி பறிப்பும் பெருமளவு குறைந்துள்ளது.
பணி பளு குறைந்தது:  கண்காணிப்பு கேமராவில் காவல்துறையினருக்கு பெரும் பணி பளு குறைந்துள்ளது. முன்பு ஒரு குற்றச் செயல் நடைபெற்றதும் கைரேகையையும், தடயங்களையும் தேடிக் கண்டிபிடித்து, பின்னர் அது தொடர்புடைய முகம் தெரியாத குற்றவாளிகளை அடையாளம் கண்டு, பின்னர் அந்தக் குற்றவாளிகளை விரட்டிப் பிடித்து கைது செய்வது காவல்துறைக்கு பெரும் சவாலான பணியாக இருந்தது.
இப்போது ஒரு குற்றச் செயல் நடைபெற்றதும், காவல்துறை அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை மட்டுமே கைப்பற்றி ஆய்வு செய்து, குற்றவாளிகளை ஒரு சில நிமிஷங்களில் புகைப்படத்துடன் அடையாளம் காண்பதால் பெரும் பணிச்சுமை குறைந்துள்ளது. அதேவேளையில் குற்ற வழக்கு புலனாய்வின்போது ஏற்படும் பெரும் மன அழுத்தம்,நெருக்கடி ஆகியவை குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நகரில் நடைபெறும் குற்றங்களில் துப்பு துலக்குவதற்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், கண்காணிப்பு கேமராவே உதவுவதாக சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
25 மீட்டருக்கு ஒரு கேமரா:  கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கும்போது, முதலில் நகருக்குள் 100 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என்ற இலக்கோடு சென்னை காவல்துறை செயல்படத் தொடங்கியது. இத் திட்டம் செயல்படத் தொடங்கியதும் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என இலக்கு மாற்றப்பட்டது. இப்போது, நகருக்குள் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக  25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா  என்ற புதிய இலக்கை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் அண்மையில் நிர்ணயித்துள்ளார்.
இதற்காக, நகருக்குள் மக்கள் நெரிசல்மிக்கப் பகுதிகள், மார்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள்,கோயில்கள், மீன் மார்க்கெட்டுகள், குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பகுதிகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கண்காணிப்பு கேமரா குறைவாக உள்ள பகுதிகள், முக்கிய சாலைகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றை அடையாளம் காணும்படியும் உதவி ஆணையர்களுக்கு ஆணையர் விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமரா: இதன்படி உதவி ஆணையர்கள், புதிதாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டிய இடங்களைக் கண்டறியத் தொடங்கியுள்ளனர். சுமார் 25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்பட்சத்தில், எந்தவொரு குற்றச் சம்பவத்திலும் ஈடுபடும் நபரும், போலீஸின் பிடியில் தப்பிச் சென்றுவிட முடியாது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும்,  25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு என்று பொருத்தப்பட்டால், அவற்றின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் உயரும் என காவல்துறையினரால் கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க நகரமாக உள்ள சென்னை, இன்னும் பாதுகாப்புமிக்க நகரமாக மாறுவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பும் மேலும் உறுதி செய்யப்படும் என சென்னை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

18 சோதனைச் சாவடிகளில்  ஏ.என்.பி.ஆர். கேமரா 

சென்னையில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நகரைச் சுற்றியுள்ள 18 சோதனைச் சாவடிகளில் அன்ற்ர்ம்ஹற்ண்ஸ்ரீ ய்ன்ம்க்ஷங்ழ் ல்ப்ஹற்ங் ழ்ங்ஸ்ரீர்ஞ்ய்ண்ற்ண்ர்ய் கேமரா பொருத்தப்பட உள்ளது.  செங்குன்றம், மணலி, அலமாதி, முண்டியம்பாக்கம், நசரத்பேட்டை , குன்றத்தூர் அருகே உள்ள கரீமாநகர், பாக்கம், செம்மஞ்சேரி, பரங்கிமலை உள்பட 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன. சென்னை நகர்பகுதியைப் பொருத்தவரை தியாகராயநகர், அண்ணாநகர், அடையாறு ஆகிய காவல் மாவட்டங்களிலும் சோதனைச் சாவடிகள் உள்ளன.

இதில் முதல்கட்டமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு அருகே கடந்த வாரம் 8 ஏ.என்.பி.ஆர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அடுத்த கட்டமாக 17 சோதனைச் சாவடிகளிலும் ஏ.என்.பி.ஆர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

சாதாரண கேமராவை காட்டிலும், இந்த கேமராக்கள், சாலைகளில் செல்லும் வாகனங்களில் பதிவு எண்களைக் கண்காணித்து எச்சரிக்கும் வசதி கொண்டதாகும். மேலும் வாகனங்களில் பதிவு எண்களை எப்படி எழுதினாலும், எளிதில் காண முடியாதளவுக்கு பதிவு எண் பலகையை சேதப்படுத்தி வைத்திருந்தாலும் இந்த வகை கேமராக்கள், அந்த பதிவு எண்களைத் துல்லியமாகப் பதிவு செய்து, அதில் உள்ள எண்களைக் காட்சிப்படுத்தும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com