தமிழ் மொழிக்காக தொடர்ந்து தி.மு.க உறுதியுடன் போராடும்: ஸ்டாலின் 

தமிழ் மொழிக்காக தொடர்ந்து தி.மு.க உறுதியுடன் போராடும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ் மொழிக்காக தொடர்ந்து தி.மு.க உறுதியுடன் போராடும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை (General Departmental Competitive Examination), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், ‘ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்’ என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

ரயில்வேயின் இந்த நடவடிக்கை ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஒழிக்கும் முயற்சியென்று  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னையில் போராட்டமும் நடைபெற்றது.

இப்போது ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் பிராந்திய பொது மேலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதம் மூலம்  திங்கள் மாலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் மொழிக்காக தொடர்ந்து தி.மு.க உறுதியுடன் போராடும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

ரயில்வேயில் துறைசார்ந்த GDCE   தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com