சுடச்சுட

  

  பள்ளிக் கல்வித்துறையில் 19,427 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

  By DIN  |   Published on : 10th September 2019 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்,  ஆசிரியர் அல்லாத 19,427 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
  இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:  
  பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும்,  தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  
  இவற்றில் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி 19,427 ஆசிரியர்,  ஆசிரியரல்லாத பணியிடங்கள், நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என அதில் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai