100 நாள் சாதனையின் உண்மை நிலையை பாஜக உணர வேண்டும்: இரா.முத்தரசன்

 நூறு நாள் சாதனையின் உண்மை நிலையை உணர்ந்து, பாஜக அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
100 நாள் சாதனையின் உண்மை நிலையை பாஜக உணர வேண்டும்: இரா.முத்தரசன்


 நூறு நாள் சாதனையின் உண்மை நிலையை உணர்ந்து, பாஜக அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற பாஜக, நூறு நாள்கள் சாதனையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்த நூறு நாள்களுக்குள்ளாக, 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்துள்ளது. 
மோட்டார் வாகன தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடரமுடியாத நிலை உருவாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதுடன், வேளாண்மை தொழில் என அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது.  ஜம்மு-காஷ்மீர் மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகள் ஒவ்வொருவராக ராஜிநாமா செய்து வருகின்றனர். அதுபோல நீதிபதிகளும் ராஜிநாமா செய்து வருகின்றனர். இந்த நிலை மேலும் தொடரும் அபாயமும் உள்ளது.
எனவே, நூறு நாள் சாதனை எது என்பதை உணர்ந்து பாஜக அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com