சுடச்சுட

  

  கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் மாயம்? 

  By DIN  |   Published on : 11th September 2019 07:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kollidam river accident

  கொள்ளிடம் ஆற்றில் விபத்து

   

  அரியலூர்: அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை படகில் கடக்க முயன்ற போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் எதிர் கரைகளில் மேலராமநல்லூர் மற்றும் கீழராமநல்லூர் என இரண்டு ஊர்கள் அமைந்துள்ளன. மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே அந்தபகுதி மக்கள் உள்ளனர் என்று தெரிகிறது. கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர்வரத்து இருந்துள்ளது.

  இந்நிலையில் புதன் மாலை அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு ஒரு படகில் 30 பேர் சென்றுள்ளனர்.  ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக படகு  கவிழ்ந்தது. இந்த விபத்தில்சிக்கியவர்களில் 10 பேர் மீட்கப்பட்டநிலையில், மேலும் 10 பேர் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் தஞ்சம் அடைந்தனர்.

  படகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai