தமிழக மக்களுக்கு நன்மை ஏற்படும்: ஜி.கே.வாசன்

தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றிகரமாக திரும்பியிருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் பயணத்தின் மூலம்  41 நிறுவனங்களுடன் ரூ.8, 835 கோடி  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருப்பதும், இதன் மூலம் சுமார் 35,520 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதும் நல்ல முயற்சியாகும். எனவே, முதல்வர்  மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் நன்மை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியிருக்கும் முதல்வருக்கு வாழ்த்துகள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com