சுடச்சுட

  

  தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை

  By DIN  |   Published on : 12th September 2019 02:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  oraja

  தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

  தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்பட்டு வந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

  வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட துணை முதல்வர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக்குழுவும் செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. 

  மேலும் பால் உற்பத்தி மேல்நிலை பதிவாளர் உள்ளிட்ட 17 பேர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வருகின்ற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai