பொங்கல் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் முடிந்தது

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் முடிவடைந்தது. 
பொங்கல் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் முடிந்தது

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் முடிவடைந்தது. 

பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி போகியிலிருந்து, 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதியான திங்கட்கிழமையை தவிர்த்து பார்த்தால், ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், பொங்கல் பண்டிகை கொண்டாட ஜனவரி 10ஆம் தேதி வெளியூர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. 

இதற்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில்  டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி, ஒரு நிமிடம் முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்.14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு செப்.15ஆம் தேதியும் தொடங்குகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ஆம் தேதிக்கான முன்பதிவு செப்.16ஆம் தேதி தொடங்குகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின் சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ஆம் தேதியும், ஜனவரி 18ஆம் தேதிக்கான முன்பதிவு செப்.20ஆம் தேதியும், ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்.21ஆம் தேதியும் தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com