தாமதமாக வீராணம் ஏரி திறப்பு: விவசாயிகள் அதிருப்தி

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக முன்னதாகவே தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். கடலூர் மாவட்ட வேளாண் பாசனத்துக்காக வீராணம்


வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக முன்னதாகவே தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். கடலூர் மாவட்ட வேளாண் பாசனத்துக்காக வீராணம் ஏரியிலிருந்து புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதுகுறித்து வீராணம் ஏரிப் பாசன விவசாய சங்கத் தலைவர் ஆர்.பாலு கூறியதாவது:
வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் 22-ஆம் தேதி மேட்டூர் அணை நீர் வந்த போதே, பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் சார்பிலும், சங்கத்தின் சார்பிலும் கோரிக்கை விடுத்தோம். 
ஆனால், தண்ணீர் திறக்கப்படவில்லை. அப்போது தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் விவசாயிகள் நாற்று நட்டு நடவு செய்திருப்பார்கள். தற்போது, நெல் விதைப்பு செய்ய இருப்பதால் களை எடுப்பது சிரமம். அதேபோன்று, அனைத்து வாய்க்கால்களையும் கடைமடை வரை தூர்வார வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. குடிமராமத்துப் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. பொதுப் பணித் துறை அதிகாரிகள் சரியாக திட்டமிடாததே இதற்குக் காரணம் என்றார் அவர்.
காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தலை மடையான கீழணையிலிருந்து முதலில் தண்ணீர் திறந்துவிடப்படும். நிகழாண்டில், கடைமடையான வீராணம் ஏரியிலிருந்து முதலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது விவசாயிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com