சுடச்சுட

  

  அந்நிய முதலீடு குறித்து கேள்வி எழுப்ப ஸ்டாலினுக்கு உரிமை உண்டு: வசந்தகுமார் எம்.பி.

  By DIN  |   Published on : 13th September 2019 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் கிடைத்த முதலீடு குறித்து கேள்வி எழுப்ப எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு உரிமை உண்டு என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் கூறினார். 
  நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வெளிநாடு சென்று முதலீடுகளை கவர்ந்து வந்ததாக கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம், அதன் விவரத்தை கேட்க தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உரிமை உள்ளது. வெளிநாட்டு பயணத்தில் என்னென்ன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
  நாங்குநேரி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை, திமுக, காங்கிரஸ் கட்சிகள் கலந்தாலோசித்து முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்குத்தான் அத்தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்க காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிமை உள்ளது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai