சுடச்சுட

  
  senthilactor


  அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வியாழக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:
  கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராக எஸ்விஎஸ்பி மாணிக்க ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அமைப்புச் செயலாளர்களாக மன்னார்குடி சிவா ராஜமாணிக்கம், தேனியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.கதிர்காமு, பேராவூரணியைச் சேர்ந்த எஸ்.கே.தேவதாஸ், தூத்துக்குடி ஹென்றி தாமஸ், சென்னையைச் சேர்ந்த நடிகர் ஆர்.செந்தில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஆர்.சுந்தரராஜும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த எம்.புவனேஸ்வரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிவிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai