சுடச்சுட

  


  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சோனியாகாந்தி உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க கடந்த ஜூன் 9-ஆம் தேதியன்று தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முறையாக நடைபெறவில்லை.
  இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்வு முடிவுகள் குறித்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியல் திடீரென நீக்கப்பட்டு புதிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தத் தேர்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். 
  இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக மருத்துவத் தேர்வு வாரியம் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai