சுடச்சுட

    

    தொலைநிலை படிப்புகளுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

    By DIN  |   Published on : 13th September 2019 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கால அவகாசத்தை நீட்டித்ததைத் தொடர்ந்து, தொலைநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை வருகிற 30-ஆம் தேதி வரை சென்னைப் பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
    இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 2019 ஆண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது http://online.ideunom.ac.in என்ற வலைதளம் மூலமாக ஆன்-லைனில் சேர்க்கை பெற முடியும். மேலும் விவரங்களை www.ideunom.ac.in இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai