சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு: தென்மாவட்ட ரயில்களில் சில நிமிடங்களில் நிறைவு

  By DIN  |   Published on : 13th September 2019 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  GDC exams in Indian Railways

  இந்தியன் ரயில்வே


  பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் வியாழக்கிழமை தொடங்கியது. ஜனவரி 10-ஆம் தேதி பயணத்துக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள்,  தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது. 
  தமிழர் திருநாளான தை பொங்கல் 2019 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக வெளியூர்களில் பணி புரியும் லட்ச கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். 
  இந்நிலையில், 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி (செவ்வாய்) போகிப் பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. அடுத்த நாள் 15-ஆம் தேதி (புதன்) பொங்கல், 16-ஆம் தேதி (வியாழன்) மாட்டுப் பொங்கல், 17-ஆம் தேதி (வெள்ளி) காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகின்றன.
  பொங்கலுக்கு முன்பு ஜனவரி 13-ஆம் தேதி திங்கள் மட்டுமே வேலை நாள். அதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஜனவரி 11-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி, 19-ஆம் தேதி ஞாயிறு வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால், வெளியூர் செல்பவர்கள் அதற்கேற்ப பயணத் திட்டம் வகுத்து வருகின்றனர்.
   இந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் பயணத்துக்கான முன்பதிவு வியாழக்கிழமை  தொடங்கியது.  120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்பதால் ஜனவரி 10- ஆம் தேதி பயணத்துக்கு செப். 12 -ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்கான டிக்கெட் முன்பதிவு  அனைத்தும் நிறைவடைந்தது.  பாண்டியன், வைகை, முத்துநகர், பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அனைத்தும் முடிந்தது. தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ததால், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
  ஜனவரி 11-ஆம் தேதிக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமையும் (செப். 13), ஜனவரி 12-ஆம் தேதிக்கான முன்பதிவு சனிக்கிழமையும் (செப். 14) தொடங்குகிறது. 
  ஜனவரி 13-ஆம் தேதிக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமையும் (செப்.15),  ஜனவரி 14-ஆம் தேதிக்கான முன்பதிவு வருகிற திங்கள்கிழமையும் (செப். 16) தொடங்குகிறது பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19-ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20-ஆம் தேதிக்கான முன்பதிவு வருகிற 22-ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai