சுடச்சுட

  

  பொருளாதார வளர்ச்சியில் தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்: இரா.முத்தரசன்

  By DIN  |   Published on : 13th September 2019 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதில் மத்திய அரசு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
  திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் மத்திய அரசு அத்துமீறி தலையிடுகிறது. கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பறித்துள்ளது. இந்தப் பணம் எதற்காக செலவிடப்படவுள்ளது என்பதை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.
  கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதில் மத்திய அரசு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  ஆந்திர மாநில அரசு தங்கள் எல்லைக்குள் பாலாற்றில் 33 கி.மீ. தூரத்தில் 22 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கொள்ளிடத்திலும், காவிரியிலும் தடுப்பணை இல்லை.  இதனால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
  டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்துப் பணிகள், தூர்வாரும் பணிகள், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, செலவிடப்பட்ட நிதி, ஒப்பந்ததாரர்கள் பற்றிய விவரம் என ஒட்டுமொத்த தகவல்களையும் முதல்வர் விவரிக்க வேண்டும் என்றார் முத்தரசன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai