சுடச்சுட

    

    மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு

    By DIN  |   Published on : 13th September 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


     மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வரும் தீபாவளி பண்டிகை முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயிலில் தினசரி அதிகாலை நடை திறந்ததில் இருந்து இரவு  நடை சாத்தும் வரை  இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. கோயிலில் வரும் தீபாவளித் திருநாள்(அக்டோபர் 27) முதல் லட்டு பிரசாத விநியோகம் அமலுக்கு வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
    கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்குவதற்காக  ரூ.5 லட்சம் மதிப்பில் லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai