சுடச்சுட

  
  eps_ops

   

  சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

  இந்நிலையில், மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

  கட்சி, இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்வ மிகுதியால், விளைவுகளை அறியாமல் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai