சுடச்சுட

  

  தொல்பொருட்களை பதிவு செய்வதற்கான பிரசார முகாம்: இந்திய தொல்லியல் துறை அழைப்பு

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 13th September 2019 05:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  keezhadi_2

   

  தொல்பொருட்கள் மற்றும் புதையல் சட்டம் 1972 விதி 1973 ன் படி தொல்பொருட்களை பதிவு செய்வதற்கான பிரசார முகாம்.

  இந்திய அரசின் இந்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் இந்திய தொல்லியல் துறை செப்டம்பர் 13 முதல் 28, 2019 ஆம் தேதி வரை 15 நாட்கள் தொல்பொருட்கள் மற்றும் புதையல் சட்டம் 1972 மற்றும் விதி 1973-ன் படி தனிப்பட்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ இருக்கும் தொல்பொருட்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

  தனிப்பட்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ இருக்கும் தொல்பொருட்கள் மற்றும் கலை பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம், தன்னிடம் வைத்துக்கொள்வதற்கும் மற்றவர்களுக்கு அதை பரிமாற்றம் செய்வதற்கும் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே இம்முகாம் நடத்தப்படுகிறது.

  இப்படி தொல்பொருட்கள் மற்றும் கலை பொருட்கள் பதிவு செய்வதற்கு இந்திய தொல்லியல் துறை எல்லா விதங்களிலும் பொதுமக்களுக்கு வழிகாட்டவும் உறுதுணையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான பிரசாரம் இதுவாகும். இந்த சிறப்பு முகாமில் தொல்பொருட்கள் மற்றும் கலை புதையல் சட்டம் பகுதி 14 - ன் படி தனிநபரோ அல்லது நிறுவனமோ தங்களிடம் உள்ள தொல்பொருட்களை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் பதிவு அதிகாரியிடம் பதிவு செய்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

  • 1. ஒவ்வொரு தொல்பொருளின் அஞ்சல் அட்டை அளவு உள்ள மூன்று புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.
  • 2. நிரப்பப்பட வேண்டிய படிவம் VII, இந்திய தொல்லியல் துறை சென்னை வட்டத்தின் இணையதளம் www.asichennai.gov.in ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  இந்த முகாமின் ஓர் அங்கமாக 25.09.2019 அன்று சென்னையில் உள்ள கலாசேத்ரா மற்றும் பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் 27.09.2019 அன்று தேனுபுரீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  சட்டம் மற்றும் விதிகளின் படி;

  • 1. கல், சுடுமண், உலோகம், தந்தம் மற்றும் எலும்பிலான சிலைகள்;
  • 2. காகிதம், மரம், துணி மற்றும் பட்டு பொருட்களில் வரையப்பட்ட ஓவியங்கள்;
  • 3. ஓலைச்சுவடிகள்;
  • 4. மரத்திலான சிலைகள் போன்ற பொருட்கள் பதிவு செய்யப்படும்.
  • என தொல்லியல் கண்காணிப்பாளர், சென்னை வட்டம், சென்னை அழைப்பு விடுத்துள்ளார்.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai