சுடச்சுட

  

  பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இனி ஒரே தாள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி  

  By DIN  |   Published on : 13th September 2019 10:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  single language paper for SSLC

  பத்தாம் வகுப்பு மாணவர்கள்

   

  சென்னை: பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இரண்டு தாள்களுக்குப் பிறகு இனி ஒரே தாள் மட்டும்தான் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.  

  கடந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழித்தேர்வுகளிலும், தற்போது நடைமுறையில் உள்ள தாள்-1 மற்றும் தாள் -2 ஆகிய இரண்டு தாள்களுக்குப் பதிலாக ஒரே தாள் தேர்வு மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்புவெளியானது.

  அப்போதே விரைவில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த நடைமுறை கொண்டு வரப்பப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது

  இந்நிலையில் பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இரண்டு தாள்களுக்குப் பிறகு இனி ஒரே தாள் மட்டும்தான் என்று வெள்ளி மாலை பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.  

  இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் விடைத்தாள் திருத்த எளிதாக இருப்பது, பாடத்தை ஆசிரியர்கள் திறம்பட நடத்த உதவுவது மற்றும் மாணவர்களுக்கு எளிமையான் கற்றல் ஆகியவையே இந்த முடிவையெடுக்க காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அத்துடன் இந்த நடைமுறையானது தற்போதைய கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai