சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு: செப்.27-இல் சென்னையில் தொடக்கம்

சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு சென்னையில் வரும் 27,  28 தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை


சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு சென்னையில் வரும் 27,  28 தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
நவீன மருத்துவத் தொழில்நுட்பம், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவத் துறை மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளிலான கருத்தரங்குகள் 25 அமர்வுகளாக நடைபெற உள்ளன. அதில் பல்வேறு நிபுணர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். அதுமட்டுமன்றி, சுகாதாரத் துறை சார்ந்த புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு, அத்தகைய நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மாநாட்டில் செய்யப்பட்டுள்ளன. கிண்டியில் உள்ள ஐஐடி சென்னை வளாகத்தில் அந்நிகழ்வு நடைபெறவிருக்கிறது. முன்னதாக இதுதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநாட்டின் தலைவர் சமீர் மேத்தா, செயலாளர் ஏடெல் உள்ளிட்டோர் கூறியதாவது:
சர்வதேச அளவில் உள்ள மருத்துவத் தொழில்நுட்பங்களையும், புதிய நடைமுறைகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தித் தரும். இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சைகளை உள்நாட்டிலும் மேம்படுத்த இது வகை செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com