Enable Javscript for better performance
ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமைகள்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமைகள்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

    By DIN  |   Published on : 14th September 2019 10:05 AM  |   அ+அ அ-   |    |  

    meet3

    சென்னையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது விசாரணை.


    தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சென்னையில் பொது விசாரணை நடத்தியது. 

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை, மனித உரிமை மீறல் புகார்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் பொது விசாரணை சென்னையில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்றன. 

    இந்த விசாரணையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும்,  உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான ஹெச்.எல். தத்து தொடக்கி வைத்து  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை, மனித உரிமை மீறல் புகார்கள் மீது காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    பொது விசாரணை முகாமில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள், தங்கள் குறைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.  கடந்த இரண்டு நாள்களில் 179 வழக்குகள் இந்த அமர்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் பத்து வழக்குகளுக்கு தீர்ப்பும் வழங்கப்பட்டது. இதில் இரண்டு வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பாயம் ரூ.8 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கியது. இதில் பெரும்பாலும் காவல்துறையினரின் அடக்குமுறை மற்றும் ஓய்வூதிய தொகை தொடர்பான வழக்குகள் வந்தன.  

    இந்த தீர்ப்பாயத்தில் மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, காவல்துறை அடக்குமுறை, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களின் குறைபாடுகள், வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்ப்போர் சந்திக்கும் துன்பங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி ஊக்கத்தொகை நிராகரிப்பு போன்றவை குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அடைந்த பெண்களுக்கு மறுவாழ்வு மையம் அமைப்பது, சென்னையில் குவியும் குப்பைகளை திறம்பட கையாளுவது, விழுப்புரத்தில் ஏழை ஆதிவாசிகளுக்கு வீடு வழங்குதல், துணிக்கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல், கொத்தடிமைகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற அறிவுறுத்தல்களை தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp