Enable Javscript for better performance
கடையத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை வைக்க இடம் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கடையத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை வைக்க இடம் ஆய்வு

    By DIN  |   Published on : 14th September 2019 03:01 AM  |   அ+அ அ-   |    |  


    பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் ஊரான திருநெல்வேலி மாவட்டம், கடையத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை வைப்பதற்கான இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
    பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில், பாரதியார் 2 ஆண்டுகள் வசித்துள்ளார். மேலும், இங்கு இருந்த காலத்தில் பல்வேறு பாடல்கள் இயற்றியுள்ளார்.
    பாரதியாரின் நூற்றாண்டையொட்டி, கடையத்தில் அன்ன சத்திரம் கமிட்டி சார்பில் இயங்கி வந்த பள்ளிகளுக்கு பாரதியார் பெயர் சேர்க்கப்பட்டு சத்திரம்பாரதி தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று பெயர் வைக்கப்பட்டது. பாரதியார் நினைவாக அரசுப் பொது நூலகத்துக்கு பாரதியார் நூலகம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பாரதியார் நினைவாக சிலையோ, நினைவிடமோ இல்லை. இதையடுத்து, சென்னை  சேவாலயா அறக்கட்டளை சார்பில், பாரதியார்- செல்லம்மாள் வீடு இருந்த பெருமாள்கோவில் தெருவில் பாரதியார்- செல்லம்மாள் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    இதையொட்டி, கடையம் பாரதியார் தெருவில் உள்ள பெருமாள் கோவில் முன் சிலை வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அனுமதி கோரியிருந்தனர்.
    இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கடேஷ், கடையம் பாரதியார் தெரு பெருமாள் கோயில் முன் பாரதி- செல்லம்மாள் சிலை வைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தார். பெருமாள் கோயிலில் கீழ் மதில்சுவருக்கு வெளியே கோயிலின் வாயிலுக்கு வடபுறம் கோயில் நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 10-க்கு 10 அடி அளவில் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கோயில் முன் சிலை வைப்பதால், அறநிலையத் துறை மற்றும் பாரதியார் தெரு பொதுமக்கள் ஆகியோரிடம் ஒப்புதல்பெற வலியுறுத்தப்பட்டது.
     

    kattana sevai