Enable Javscript for better performance
கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு : ஜி.கே.வாசன் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு : ஜி.கே.வாசன் கோரிக்கை

    By DIN  |   Published on : 14th September 2019 03:08 AM  |   அ+அ அ-   |    |  


    கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டார்.
    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஆற்றில்  மூழ்கியவர்களைத் தேடும் தொடர் பணியில் அப்பகுதி இளைஞர்கள் தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் தாமாக முன்வந்து தேடியதும், காப்பாற்றியதும் மிகவும் பாராட்டுக்குரியது. 
    தனியாராக இருந்தாலும் அரசாக இருந்தாலும் ஆற்றில் படகை செலுத்த நினைத்தால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
     

    kattana sevai