Enable Javscript for better performance
தூய்மை நகர திட்டப்பணிகளை ஆவணப்படுத்துவது அவசியம்: திட்ட இணை இயக்குநர் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை நகர திட்டப்பணிகளை ஆவணப்படுத்துவது அவசியம்: திட்ட இணை இயக்குநர் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 14th September 2019 03:03 AM  |   அ+அ அ-   |    |  

    jindal

    திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மை நகர கணக்கெடுப்பு  2020 மண்டல பயிற்சி பட்டறையைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார் தூய்மை இந்தியா திட்ட இணை இயக்குநர் வி.கே. ஜிண்டால்.


    மாநகராட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை நகரத் திட்டப்பணிகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று தூய்மை இந்தியா திட்ட இணை இயக்குநர் வி.கே. ஜிண்டால் கூறினார். 
    திருச்சி கலையரங்க வளாகத்தில் தூய்மை இந்திய திட்டம் குறித்த பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சியில், மத்திய அரசின், தூய்மை இந்தியா திட்ட இணை இயக்குநர் வி.கே.  ஜிண்டால் (தில்லி) சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,  பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்து  அவர் பேசியது:
    மத்திய அரசு மேற்கொண்டு வரும் தூய்மை நகர வரிசைப் பட்டியலில் இடம் பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளும் போட்டியிட்டு வருகின்றன.
    குறிப்பாக திருச்சி மாநகராட்சி கடந்த 2018-ஆம் ஆண்டு 13 -ஆவது இடத்தைப் பெற்றது. அடுத்தாண்டு ஒரு இடம் மட்டுமே முந்திய நிலையில் 12 -ஆவது இடத்துக்குத்தான் வரமுடிந்தது. முதலிடம் பிடிக்க முடியவில்லை.  முதலிடம் பிடிக்காததற்கு முக்கியக் காரணம், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் தூய்மை நகரத் திட்டப்பணிகளை முறையாக ஆவணப்படுத்தாமல் போனதுதான். எனவே, இனி வரும் காலங்களிலாவது, மேற்கொள்ளும் திட்டப்பணிகளை முறையாக ஆவணப்படுத்துவது அவசியம்.  குப்பைகளை மாநகராட்சி சார்பில், வீடுகளுக்கே சென்று, தரம்பிரித்து வாங்கும் செயல்  வரவேற்கத்தக்கது. அதே  நேரம், வீடுகளில் வாங்கும் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மீண்டும் ஒன்றாக ஏற்றிச்செல்வது கூடாது. தரம்பிரித்தவற்றை தரம்பிரித்தே ஏற்றிச்சென்று அவற்றை முறையாக அழிக்கவோ அல்லது உரமாக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.  
    அதுபோலவே கழிவு நீரை மறுசுழற்சி செய்வதும், திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையும், தூய்மை நகரப் பட்டியலில் இடம்பிடிக்க முக்கியக் காரணியகளாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் மொத்தம் 6000 மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
    இது தொடர்பாக அடுத்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலும் மீண்டும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன்பின்னரே 2020 -ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரப் பட்டியல் ஜூன் மாதத்தையொட்டி வெளியிடப்படும் என்றார்.  


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp